போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகைகளின் செல்போனில் ஆபாச படங்களா?

  • IndiaGlitz, [Thursday,October 01 2020]

பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஜாமீன் மனுக்கள் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் சிறையில் தொடர்ந்து உள்ளனர். இந்த நிலையில் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் போதைப்பொருள் விவகாரம் குறித்த தகவல்கள் அதில் ஏதும் இருக்குமா என்பதை அறிய அந்த போனிலிருந்து டெலிட் செய்யப்பட்ட டேட்டாக்களை ரெக்கவரி செய்து போலீசார் ஆய்வு செய்ததாகவும் தெரிகிறது

இவ்வாறு டெலிட் செய்யப்பட்ட டேட்டாக்களை ரிக்கவரி செய்ததில் அதில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், நிர்வாண புகைப்படங்கள் ஆகியவை இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து போதை பொருள் விவகாரம் மட்டுமின்றி பாலியல் விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது