பயிற்சி வீடியோவுக்கு பதில் பாலியல் வீடியோ: விசாரணைக்கு உத்தரவிட்ட பி.எஸ்.எப்
- IndiaGlitz, [Wednesday,June 14 2017]
எல்லை பாதுகாப்பு படை என்று அழைக்கப்படும் பி.எஸ்.எப் வீரர்களுக்கு அவ்வப்போது வீடியோ மூலம் பயிற்சி அளிப்பது வழக்கம். இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை நுழையவிடாமல் தடுப்பது எப்படி என்பது குறித்த விளக்கங்கள் அந்த வீடியோவில் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு பயிற்சி முகாமில் வீடியோ பயிற்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
பி.எஸ்.எப் அதிகாரி ஒருவரின் லேப்டாப்பில் இருந்து திரையில் பயிற்சி வீடியோ திரையிடப்பட்டது. ஆனால் பயிற்சி வீடியோவுக்கு பதிலாக அதில் ஆபாச படம் ஒடியதால் பயிற்சிக்கு வந்திருந்த ஆண் மற்றும் பெண் பி.எஸ்.எப் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒருசில வினாடிகளில் அந்த அதிகாரி சுதாரித்து கொண்டு அந்த வீடியோவை நிறுத்திவிட்டார். இருப்பினும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பயிற்சி வீடியோ தயாரிப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரி இத்தனை கவனக்குறைவாக இருந்ததை மன்னிக்க முடியாது என்றும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் தவறு செய்த அதிகாரிக்கு கடும் தண்டனை காத்திருப்பதாக பி.எஸ்.எப் வட்டாரங்கள் கூறுகின்றன.