ஆபாச படம் பார்த்த சிறுவனின் வீட்டிற்கு ஆடையின்றி சென்ற ஆபாச நடிகர், நடிகை: அதிர்ச்சி வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,June 24 2020]

நியூசிலாந்து நாட்டில் ஆபாச படம் பார்த்த சிறுவனின் வீட்டிற்கு அவர் பார்த்த ஆபாச படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகை ஆடையின்றி நிர்வாணமாக சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

நியூசிலாந்து நாட்டில் ஆபாச படம் பார்க்கும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அந்நாட்டு அரசு ஒரு செய்தி திரைப்படத்தை எடுத்துள்ளது. ஆபாச படத்தில் வரும் காட்சிகளுக்கும் உண்மையான செக்ஸ் உறவுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தும் வகையிலும், இளைய தலைமுறையினர் செக்ஸை சரியாக புரிந்து கொள்ள வழிவகுப்பதற்கும் இந்த செய்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

இந்த படத்தில் ஆபாச நடிகர் மற்றும் நடிகை ஆகிய இருவரும் ஆடையின்றி ஒரு வீட்டிற்கு சென்று கதவை தட்டுகின்றனர். அந்த வீட்டில் உள்ள ஒரு பெண் கதவைத் திறந்து இருவரும் நிர்வாணமாக இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார். என்ன விஷயம் என்று கேட்ட போது உங்கள் வீட்டில் உள்ள சிறுவன் தங்களுடைய ஆபாச படத்தை பார்ப்பதாக கூறுகிறார்கள். உடனே அந்த பெண் தனது மகனை அழைக்கிறார். அவரது மகன் லேப்டாப்புடன் வந்து தங்கள் கண் எதிரேயே, தான் அந்த ஆபாச படத்தில் நடித்த நடிகர் நடிகை நிர்வாணமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான்

பின்னர் அந்த நடிகர், நடிகை இருவரும் ஆபாச படத்தில் இருக்கும் காட்சிகளுக்கும் உண்மையான உறவு முறைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை உணர்த்தவே வந்துள்ளதாக தெரிவித்தனர். அதனை அடுத்து அந்தத் தாய் தனது மகனுக்கு அறிவுரை கூறுவது போல இந்த செய்தி திரைப்படம் முடிவடைகிறது.

இந்த திரைப்படத்துக்கு நியூசிலாந்து நாட்டின் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த குறும்படத்தை சுமார் 6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா!!! சாத்தியமே இல்லை என மருத்துவர்கள் அதிர்ச்சி!!!

மெக்சிகோவில் ஒரே பிரவசத்தில் ஒரு பெண்ணிற்கு 2 ஆண் குழந்தை மற்றும் 1 பெண் குழந்தை பிறந்தது

கல்வான் தாக்குதலில் 40 சீன இராணுவ வீரர்கள் உயிரிழப்பா??? சீனா என்ன சொல்கிறது???

கடந்த ஜுன் 15 ஆம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் மலை பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடைபெற்ற கைக்கலப்பில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

பாலிவுட்டில் ஆக்சன் நாயகி ஆகும் 'மாஸ்டர்' நாயகி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த மாளவிகா மோகனன், அதன் பின்னர் ஜாக்பாட் அடித்தது போல் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் நாயகி ஆனார்.

'காப்பான்' பட நடிகையை பணம் கேட்டு மிரட்டிய நால்வர் கைது!

கடந்த ஆண்டு வெளியான சூர்யாவின் 'காப்பான்' திரைப்படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு'

நாளை முதல் 30ஆம் தேதி வரை மேலும் ஒரு கட்டுப்பாடு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தாலும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.