ஷேர்ன் வார்னே மீது ஆபாச நடிகை கூறிய திடுக்கிடும் புகார்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சுழற்பந்து வீச்சாளர்களில் உலகின் நம்பன் ஒன் இடத்தை பெற்றவருமான ஷேர்வார்னே மீது ஆபாச நடிகை ஒருவர் போலீசாரிடம் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.
கடந்த வெள்ளி அன்று இரவு கிளப்பில் தான் கலந்து கொண்ட போது ஷேர்வார்னே தனது முகத்தில் பலமாக தாக்கியதாகவும், இதனால் தனது முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆபாச படங்களில் நடித்துள்ள ஃபாக்ஸ் என்ற நடிகை புகார் கூறியுள்ளார். மேலும் காயம் பட்ட தனது முகத்தின் புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் இரவு கிளப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்க்க முடிவு செய்துள்ளனர். ஷேர்வார்னே மற்றும் ஃபாக்ஸ் இணைந்து இரவு கிளப்புக்கு வந்தார்களா? அல்லது தனித்தனியாக வந்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout