தமிழகத்தில் ஆபாச படம் பார்த்த 3000 பேர் லிஸ்ட் தயார்: விரைவில் விசாரணை

உலகிலேயே அதிகமாக ஆபாசப்படம் பார்ப்பவர்கள் இந்தியர்கள் தான் என்று சமீபத்தில் அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்த பட்டியலை அந்நிறுவனம் இந்திய அரசுக்கு அனுப்பி இருந்த நிலையில் அந்தப் பட்டியலின்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக நபர்கள் ஆபாச படம் பார்த்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் ஆபாசம் படம் பார்த்த 3000 பேர் கொண்ட பட்டியல் தற்போது தயாராக இருப்பதாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் ரவி அவர்கள் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த 3000 பேர் கொண்ட பட்டியலில் நாமும் இருக்கின்றோமா? என்ற அச்சம் பலரது மனதில் எழுந்து உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறது கூறி காவல்துறையினர் மிரட்டி இளைஞர் ஒருவரிடம் பணம் பறிக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருநெல்வேலி காவலர் ஒருவர் இளைஞர் ஒருவரை செல்போனின் மிரட்டுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விளக்கம் அளித்தபோது ’3000 பேர் கொண்ட பட்டியலில் உள்ளவர்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முறையாக காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப் படுவார்கள் என்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டுவதை கண்டு பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். ஆபாச படம் பார்த்தவர்கள் பட்டியல் விரைவில் வெளியாக இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.