'போர் தொழில்' இயக்குனருக்கு அடித்தது ஜாக்பாட்.. அடுத்த பட ஹீரோ இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Thursday,June 20 2024]

கடந்த ஆண்டு வெளியான ’போர் தொழில்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் முக்கிய வேடத்தில் நடித்த ’போர் தொழில்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து 50 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’போர் தொழில்’ வெளியாகி சரியாக ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படத்தின் தகவல் கசிந்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், தற்போது தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு விக்னேஷ் ராஜாவுடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது ’குபேரா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதனை அடுத்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு அவர் விக்னேஷ் ராஜா படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.