பிரபல டிவி தொகுப்பாளினி டிடி விவாகரத்து மனுதாக்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சின்னத்திரை தொகுப்பாளினியும் நடிகையுமான டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது கணவரை விவாகரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி டிடி, தனது பால்ய நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்திற்கு கோலிவுட் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்தியது. இந்த நிலையில் திருமணமாகி மூன்று வருடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் திடீரென டிடியும் அவரது கணவர் ஸ்ரீகாந்தும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்
திருமணத்திற்கு பின்னர் டிடி தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் நடிப்பது ஸ்ரீகாந்த் குடும்பத்தினர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் பாடகி சுசித்ரா வெளியிட்ட புகைப்படத்தால் டிடிக்கும் அவரது கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு வெளியான தனுஷின் பவர்பாண்டி' படத்தில் நடித்த டிடி, தற்போது மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com