பிரபல டிவி தொகுப்பாளினி டிடி விவாகரத்து மனுதாக்கல்

  • IndiaGlitz, [Wednesday,December 20 2017]

சின்னத்திரை தொகுப்பாளினியும் நடிகையுமான டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது கணவரை விவாகரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி டிடி, தனது பால்ய நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்திற்கு கோலிவுட் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்தியது. இந்த நிலையில் திருமணமாகி மூன்று வருடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் திடீரென டிடியும் அவரது கணவர் ஸ்ரீகாந்தும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்

திருமணத்திற்கு பின்னர் டிடி தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் நடிப்பது ஸ்ரீகாந்த் குடும்பத்தினர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் பாடகி சுசித்ரா வெளியிட்ட புகைப்படத்தால் டிடிக்கும் அவரது கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு வெளியான தனுஷின் பவர்பாண்டி' படத்தில் நடித்த டிடி, தற்போது மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.

More News

தமிழ் ராக்கர்ஸிடம் வேண்டுகோள் விடுத்த சென்னை 2 சிங்கப்பூர் இயக்குனர்

இளைஞர்களின் புதிய முயற்சியில் கடந்த வாரம் வெளியான 'சென்னை 2 சிங்கப்பூர்' திரைப்படம் முதல் பாதி நல்ல விமர்சனத்தையும் இரண்டாம் பாதி கலவையான விமர்சனங்களையும் பெற்றது

ஜெயலலிதா வீடியோ உண்மையா? அப்பல்லோ விளக்கம்

ஆர்.கே.நகர் இடைதேர்தலின் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

வட்டிக்கு கடன் வாங்கி துன்பத்தில் தவிக்கும் 'உள்குத்து' கதை

'அட்டக்கத்தி' படத்தின் நாயகி, நாயகி தினேஷ் மற்றும் நந்திதா மீண்டும் இணைந்துள்ள படம் 'உள்குத்து'. இந்த படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் கார்த்திக் ராஜூ

ஜெ. வீடியோ வெளியீடு தேர்தல் விதிமீறல்: ராஜேஷ் லக்கானி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட 7 வினாடி வீடியோ ஒன்றை சற்றுமுன்னர் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி

ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டது ஏன்? வெற்றிவேல் பரபரப்பு தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கடந்த ஒருவருடமாக சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த நிலையில் அவரது மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை கமிஷனும் விசாரணை செய்து வருகிறது