மீண்டும் பிரபல பாடகிக்கு பாலியல் தொல்லை: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Tuesday,March 13 2018]
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருவதை ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் இருந்து பார்த்து வருகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் பெரும்பாலானவற்றை அவர்கள் வெளியே சொல்ல தயங்குவதே குற்றவாளிகளின் பலமாக உள்ளது,
இந்த நிலையில் பிரபல பாடகி சின்மயி நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது அவருக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாகவும், இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ததாகவும் அதன்பின்னர் தான் பலர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கும் நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து அதில் குறிப்பிட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலானவர்கள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகளை குடும்பத்தினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்வதை தவிர்க்கின்றனர். அவ்வாறு பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் வலிமையை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.
ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாக கூறுகிறேன், உங்கள் சம்மதம் இன்றி உங்களை தொடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர் குறித்து அனைவரிடமும் பகிருங்கள். நாம் அமைதியாக இருப்பதை குற்றம் செய்பவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். எனவே உங்களுக்கு நேரும் அநியாயங்களை பகிருங்கள் என்று சின்மயி தெரிவித்துளார்.