பிரபல சுவீடன் நாட்டு தொழிலதிபர் கோவை ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கிறார் – பொதுமக்கள் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான கிம் சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்துள்ளார். மன நிம்மதியை பெறவே இங்கு வந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். ஈஷா யோகா மையத்தில் யோகா செய்வது, ஆன்மீகச் சொற்பொழிவுகளை கேட்பது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். ஆனாலும், மன நிம்மதியை பெற முடியாது தவித்து வந்த கிம் தனது பணத்தைக் கொண்டு கோவை ஏழை மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவியும் செய்து இருக்கிறார். அப்படி செய்தும் மன நிம்மதியை உணர முடியாத கிம் கடைசியில் ஒரு விசித்திரமான முடிவினை எடுத்திருக்கிறார்.
கோவை ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் அங்கு வரும் பயணிகளிடம் “அம்மா தர்மம் போடுங்க” என்று இரு கைகளையும் கூப்பி தற்போது பிச்சை எடுத்து வருகிறார். வெளிநாட்டு காரர் ஒருவர் இப்படி வெயிலில் நின்று பிச்சை எடுப்பதைப் பார்க்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரிடம் பேச்சு கொடுத்த சிலருக்கு, மேலும் அதிர்ச்சியை வரவழைத்து இருக்கிறது.
கிம் தன்னைக் குறித்து, “பெரும் தொழிலதிபரான தான் மன நிம்மதியை தேடி கோவைக்கு வந்திருப்பதாகவும், மன நிம்மதியை உணர முடியாமல் தற்போது பிச்சை எடுத்து வருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், பொது மக்கள் கொடுக்கும் 5, 10 ரூபாய்களைக் கொண்டு உணவினை வாங்கி உண்ணும்போது, தான் மிக நிம்மதியாக இருப்பதாக தெரிவித்து உள்ளார். கோவை பகுதியில் தற்போது இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments