பிரபலமாக திருநங்கைகள் குறித்து அவதூறு வீடியோ......! தர்மஅடி வாங்கிய டிக்டாக் திவ்யா...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தான் யுடியூப்-பில் பிரபலமாகமாக வேண்டும் என்பதற்காக திருநங்கைகள் குறித்து அவதூறாக வீடியோ பதிவிட்ட, டிக்டாக் திவ்யா தர்ம அடி வாங்கியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளத்தை சேர்த்தவர் டிக்டாக் திவ்யா. சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அவ்வப்போது சில்மிஷ வீடியோக்களை வெளியிட்டு வருவார். அண்மையில் வாக்களிக்கும் போது வீடியோ எடுத்து பதிவிட்டு, சர்ச்சையில் சிக்கினார். இதேபோல் தேவையில்லாமல் பலர் குறித்து கருத்துக்களை கூறியும், கெட்டவார்த்தை பேசியும் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் திவ்யா.
இந்தநிலையில் தான் யுடியூப்-பில் ட்ரெண்டிங்கில் வர வேண்டும் என்பதற்காக திருநங்கைகள் பற்றி பேசியுள்ளார் கொரோனா காலத்தில் கைதட்டி காசு வாங்குகிறார்கள் திருநங்கைகள், இந்த ஊரில் யாரும் நல்லவர்கள் இல்லை என அவதூறாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த திருநங்கைகள் திவ்யாவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.ஆனால் தலைமறைவானதால், அதை காணொளியாக எடுத்து பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து மறுபடியும் திவ்யா வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்கும் படி, தர்ம அடி கொடுத்துள்ளனர் திருநங்கைகள். இதனால் திருநங்கைகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட திவ்யா இனி யார் குறித்தும் தவறுதலாக, வீடியோ போடமாட்டேன் என மன்னிப்பு கேட்டுள்ளார். மற்றவர்கள் குறித்து அறியாமல் வீடியோ பதிவிடுபவர்களுக்கு, இது தக்க பதிலடி என நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments