அரபிக் குத்து பாடகி ஜோனிதா காந்திக்கு இப்படியொரு வாய்ப்பா? வியப்பில் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
காதலர் தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் “பீஸ்ட்” திரைப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் வெளியாகியது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வரும்நிலையில் அந்த லிரிக்கல் வீடியோவில் அனிருத்துடன் இணைந்து படு ரியாக்ஷனுடன் பாடியிருந்த இளம்பெண் யார் என்பதையும் ரசிகர்கள் இணையத்தில் அலசி வந்தனர்.
இதையடுத்து அவர் பெயர் ஜோனிதா காந்தி என்பதையும் இவர் இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் இசையில் “ஓ காதல் கண்மணி“ திரைப்படத்தில் “மெண்டல் மனமே“ பாடலைப் பாடியவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து “காற்று வெளியிடை“, “வேலைக்காரன்“ திரைப்படங்களுக்குப் பாடிய இவர் “டாக்டர்“ திரைப்படத்திற்கு அனிருத்துடன் இணைந்து “செல்லம்மா செல்லம்மா“ பாடலையும் பாடி ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றார்.
தற்போது “அரபிக்குத்து“ பாடலின் லிரிக்கல் வீடியோவில் ஜோனிதா காந்தி படு அசத்தாலான ரியாக்ஷன்களை கொடுத்து பாடியுள்ளார். இந்த ரியாக்ஷனை பார்த்த ரசிகக்ள் உண்மையில் “பீஸ்ட்“ ஹீரோயின் பூஜா ஹெக்டேவை விடவும் படு அசத்தலாக இருக்கிறாரே எனப் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தயாரிப்பில் உருவாக இருக்கும் “Walking talking strawberry ice cream“ திரைப்படத்தில் ஜோனிதா காந்தி கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்றும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான “சூரரைப் போற்று“ திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக வந்த கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்பதும் போன்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவந்த விநாயக் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments