பழைய செருப்புக்கு நிகரானவர் ஜோ பிடன்… இப்படி வாழ்த்தி இருக்கும் ஒரு பிரபல பத்திரிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்து இருக்கிறது நெதர்லாந்தில் உள்ள அல்கிமுன் தக்ப்லா (Algemeen Dagblad) எனும் பிரபல பத்திரிக்கை. ஆனால் அப்பத்திரிக்கை வாழ்த்து தெரிவித்த விதம்தான் தற்போது அனைவரையும் கவர்ந்துள்ளது. அதிபர் ட்ரம்ப் தான் நினைக்கும் கருத்துகளை அப்படியே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடும் பழக்கம் கொண்டவர். இதில் ஆலோசனை, ஒளிவுமறைவு, நல்லது கெட்டது என்ற பட்சாதாபத்திற்கு இடமே இருக்காது
அதுவும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பின்னர் அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்துகளைப் பார்த்து சில நேரங்களில் உலகமே மிரண்டு விட்டது. காரணம் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தும்போது வெளிப்படையாகவே குற்றம் சுமத்தும் பழக்கம் கொண்டவராக ட்ரம்ப் செயல்பட்டார். மேலும் அவருடைய கருத்துகள் பல நேரங்களில் நாட்டு மக்களை தூண்டிவிடும் விதமாகவே அமைந்து இருந்தது. இதனால் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் சில நேரங்களில் அதிபர் ட்ரம்ப்பின் பதிவை நீக்கி இருந்தன.
கடந்த சில மாதங்களில் இதுபோன்ற நடவடிக்கை அதிகமாகவே இருந்தது. ட்ரம்ப்பின் இத்தகைய செயல்பாடுகளைக் குறித்து, தற்போதைய அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றிருக்கும் ஜோ பிடன் தனது பிரச்சாரத்தில் ஒரு முறை குறிப்பிட்டு பேசியிருந்தார். அதில், “அமெரிக்காவை பொறுத்தவரை பைடன் ஒரு ஜோடி பழைய செருப்பை போல பழக்கப்பட்டது மற்றும் சௌகரியமானது”. மேலும் நான் அதிபரானால் “வாய்க்கு வரும் வார்த்தைகள் நிறைந்த அதிபரின் ட்விட்டர் பதிவுகளுடன் அமெரிக்கர்கள் கண்விழிக்க வேண்டியதில்லை” என்று பேசியிருந்தார்.
அந்தக் கருத்துகளை குறிப்பிட்டு காட்டி அல்கிமீன் பத்திரிக்கை தற்போது ஒரு ஜோடி பழைய செருப்புடன் ஜோ பிடனை ஒப்பிட்டு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறது. இந்த வாழ்த்து செய்தி பலரையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் ஜோ பிடன் அதிபர் பதவியில் பொறுப்பு ஏற்றுக் கொண்டதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அவர் கவனம் செலுத்துவார் என்று அவருடைய கட்சியினர் தகவல் வெளியிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments