உதயநிதியுடன் இணையும் பாப்புலர் ஹீரோ

  • IndiaGlitz, [Wednesday,January 13 2016]

திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்துள்ள 'கெத்து' திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் உதயநிதி அடுத்ததாக 'என்றென்றும் புன்னகை' இயக்குனர் ஏ.கே.அஹ்மத் இயக்கத்தில் 'ஜாலி எல்.எல்.பி என்ற பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உதயநிதியுடன் மீண்டும் ஹன்சிகா இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 'வெண்ணிலா கபடிக்குழு', அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு, பாயும் புலி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் இரண்டு நண்பர்கள் குறித்த கதை என்றும் உதயநிதியின் நண்பராக இன்னொரு பாப்புலர் ஹீரோ இணையவுள்ளதாகவும், அந்த ஹீரோ யார் என்பது ஒருசில நாட்களில் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளதாகவும், மதி ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

'கெத்து' படத்தின் சிறப்பு காட்சியில் முன்னாள் துணை முதல்வர்

நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் இணைந்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி', இது கதிர்வேலன் காதல்' மற்றும் 'நண்பேண்டா' ஆகிய படங்களில் நடித்த உதயநிதி ஸ்டாலின் முதன்முதலாக சந்தானம்...

'தெறி'யாக வைக்கப்பட்டுள்ள விஜய் கேரக்டரின் பெயர்

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து வரும்...

'விஜய் 60' படத்தில் நடிப்பது குறித்து மியா ஜார்ஜ் கூறிய முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 60' படத்தில் 'அமரகாவியம்'...

மியா ஜார்ஜை அடுத்து 'விஜய் 60'-ல் இணையும் இன்னொரு நடிகை

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் விஜய்யின் 60வது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது....

காமெடி ஹீரோவுக்கு காமெடியனாக நடிக்கும் கருணாஸ்

ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படத்தில் சந்தானம், கருணாஸ் இருவருமே நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தனர்....