close
Choose your channels

உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்த “மக்கள் அன்பன்“ பட்டம்… கொடுத்தது யார் தெரியுமா?

Friday, August 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உயதநிதி ஸ்டாலினுக்கு ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதுப்படத்தின் படக்குழுவினர் “மக்கள் அன்பன்” எனும் பட்டப்பெயரை கொடுத்து இருக்கும் போஸ்டர் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகராக வலம்வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார். இதனால் புதிய படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில் உதயநிதி நடிப்பில் வெளியான “கண்ணே கலைமானே” படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நேற்றுமுன்தினம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார்.

இந்தத் தருணத்தின்போது ஜி.வி.பிரகாஷ் படக்குழு சினிமாவைத் தாண்டி அரசியலில் கலக்கிவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு “மக்கள் அன்பன்” என்ற பட்டப்பெயரை வழங்கி இருந்தது. யதார்த்த சினிமாக்களை இயக்கிவரும் சீனு ராமசாமி இயக்கத்தில் “தென்மேற்கு பருவக்காற்று“, “நீர்ப்பறவை“, “தர்மதுரை“, “கண்ணே கலைமானே“ போன்ற திரைப்படங்கள் வெளியாகி இருந்தன. இதில் “கண்ணே கலைமானே“ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் நடித்து இருந்தார்.

தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் “இடிமுழக்கம்“ எனும் படம் உருவாகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை உதயநிதி வெளியிட்டு தற்போது ரசிகர்களிடைய வரவேற்பு பெற்று இருக்கிறது. யதார்த்த கதையை இயக்கிக் கொண்டிருந்த இயக்குநர் சீன ராமசாமி இந்தப்படத்தின் மூலம் ஆக்ஷன் பக்கம் தாவியிருப்பதாகவும் ரசகிர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தவிர நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய “மாமனிதன்” திரைப்படம் விரைவில் வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment