மணிரத்னம் படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,July 05 2016]

கடந்த ஆண்டு வெளியான 'ஓகே கண்மணி' வெற்றி படத்திற்கு பின்னர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 8ஆம் தேதி முதல் ஊட்டியில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் நாயகனாக கார்த்தி நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.
எப்.எம் வானொலியில் ஜாக்கியாக இருந்து பின்னர் கோலிவுட் திரையுலகில் 'தீயா வேலை செய்யணும், இது என்ன மாயம், யட்சன், நானும் ரெளடிதான்' உள்பட பல படங்களில் காமெடி நடிகராக நடித்த ஆர்ஜே பாலாஜி, மணிரத்னம் படத்தில் முதல்முறையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'மணிரத்னம் படத்தை பார்த்துதான் வளர்ந்தேன். இப்போது அவருடைய படத்திலேயே நடிப்பது பெரும் பாக்கியம். என்னுடைய கனவு நனவாகியது' என்று பதிவு செய்துள்ளார்.

More News

சூர்யாவின் அடுத்த இயக்குனர் முத்தையா ஓர் பா.ரஞ்சித் ? ஞானவேல்ராஜா விளக்கம்

ஹரி இயக்கத்தில் சூர்யா தற்போது சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் மற்றும் அனுஷ்கா நாயகிகளாக நடித்து வரும்...

'கபாலி' பிரிமியர் காட்சி இடம், தேதி, நேரம் அறிவிப்பு. ரசிகர்கள் உற்சாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை...

நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் எப்போது? அனிருத் தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் தமிழ் மற்றும் மலையாள படங்களின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்...

ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த த்ரிஷா இயக்குனர்

பிரபல நடிகை த்ரிஷா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் தற்போது அவர் தனுஷுடன் 'கொடி' ...

விஷாலின் அடுத்த அதிரடி. தமிழகம் முழுவதும் திருட்டு டிவிடி கும்பல் கைது

நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் பதவியை ஏற்றதில் இருந்தே திருட்டு டிவிடிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்...