2வது திருமணம் செய்து கொண்டாரா 'பூவே உனக்காக' அஞ்சு அரவிந்த்? அழகிய குடும்ப புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’பூவே உனக்காக’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அஞ்சு அரவிந்த், முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 1996 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’பூவே உனக்காக’. இந்த படம் தான் விஜய்யின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை கொடுத்தது என்பது மிகப்பெரிய வசூல் மழை பொழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் நடிகை அஞ்சு அரவிந்த். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் விஜய்யுடன் அவர் பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
‘பூவே உனக்காக’ வெற்றிக்கு பின்னர் அவர் பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தார் என்பதும் தற்போது கூட அவர் மலையாளத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை அஞ்சு அரவிந்த் கடந்த 2002 ஆம் ஆண்டு தேவதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் ஒரு சில ஆண்டுகளில் விவாகரத்து செய்துவிட்டு வினய சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் நடிகை அஞ்சு அரவிந்த் தனது சமூக வலைதளத்தில் தனது குடும்ப புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout