'பூவே பூச்சூடவா' சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்: ரசிகர்கள் வாழ்த்து!

  • IndiaGlitz, [Sunday,February 21 2021]

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ’பூவே பூச்சூடவா’ என்ற தொடரில் நடித்துக் கொண்டிருந்த ஏற்கனவே ஒரு சிலருக்கு திருமணம் ஆன நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது

ஜீ டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’பூவே பூச்சூடவா’ தொடரில் முக்கிய கேரக்டர்களில் நடித்த ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியன் ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணம் என்று செய்திகள் வெளியானது. இந்த செய்தியை அவர்கள் தங்களுடைய சமூக வலைதளத்தில் உறுதி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல் இதே தொடரில் அனு என்ற கேரக்டரில் நடித்து வரும் தனலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆண்டு அவருடைய காதலருடன் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வைஷ்ணவி ஜெய் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து சின்னத்திரை திரையுலக பிரபலங்கள் பலர் இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.