பிக்பாஸ் வீட்டின் மீது செருப்பை எரிந்த பூர்ணிமா.. சனம் ஷெட்டியின் ஆத்திரமான பதிவு..!

  • IndiaGlitz, [Saturday,November 25 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பூர்ணிமா மற்றும் மாயா செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாயாவின் செருப்பை கழட்டிய பூர்ணிமா, அதை பிக் பாஸ் வீட்டின் மேல் எறிய முயன்றார். அப்போது மாயா வேண்டாம் என்று தடுத்ததோடு வேண்டுமென்றால் உங்கள் செருப்பை எறிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
உடனே பூர்ணிமா தனது செருப்பை எடுத்து வந்து அதை வீட்டின் மேல் எறிந்தார். அது மேல் பகுதியில் மாட்டிக்கொண்ட நிலையில் அதை நிக்சன் எடுத்து கொடுத்தார். நல்லவேளை எடுத்துக் கொடுத்தீர்கள் என்று அவருக்கு பூர்ணிமா நன்றி கொடுத்தார்.

இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி தனது சமூக வலைத்தளத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

எங்கள் அன்பான பிக்பாஸ் செட் மீது செருப்பு வீசுவது பூர்ணிமாவால் மட்டுமே செய்யக்கூடிய மிகவும் அவமரியாதையான செயல்! அந்த வீடு புனிதமானது. நான் உட்பட பலருக்கு இது ஒரு மதிப்புமிக்க அடையாளத்தை அளித்துள்ளது. நான் அந்த வீட்டை வணங்குகிறேன்! அதனுடன் எனக்கு இருக்கும் உணர்வு பூர்வமான தொடர்பு நிரந்தரமானது. பூர்ணிமா இவ்வாறு செய்தது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் வருத்தம், மன்னிக்க முடியாதது! அவர் ஒரு நச்சுப் போட்டியாளர்’ என்று கூறியுள்ளார்.