ரெட் கார்டு கொடுத்ததற்கு நாங்க காரணமல்ல, கமல் சார் தான் காரணம்.. திடீர் பல்டி அடிக்கும் பூர்ணிமா

  • IndiaGlitz, [Thursday,November 09 2023]

பிரதீப் பிக்பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று கமல்ஹாசன் கேட்ட கேள்விக்கு அனைவரும் ஆமாம் என்று கூறி ரெட் கார்டை தூக்கினார்கள். அதனால் தான் கமல்ஹாசன் பிரதீப்பை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடிவை எடுத்தார்.

ஆனால் தற்போது பிரதீப் பிக்பாஸ் வீட்டை விட்டு சென்று கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகப்போகும் நிலையில் இன்னும் பிரதீப் குறித்த பிரச்சனை தான் வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது. பிரதீப் போனாலும் அவனை பற்றி பேசிக் கொண்டிருப்பதற்கு அவனே இங்கு இருந்திருக்கலாம் என்று கூறும் அளவுக்கு மாயா கேங் தற்போது பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது திடீரென பூர்ணிமா, பிரதீப் மீது ரெட் கார்டு கொடுத்ததற்கு நாங்கள் காரணம் அல்ல, கமல் சார் தான் காரணம் என்ற ரீதியில் பேசிக் கொண்டிருக்கிறார். பிரதீப் என்னதான் மோசமாக நடந்தாலும் அவரை எங்களால் சமாளிக்க முடியும், பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவன் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. நாங்கள் கூல் சுரேஷ் பிரச்சனையை குறித்து தான் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று உரிமை குரல் எழுப்பினோம். ஆனால் ரெட் கார்டு கொடுத்தது பெண்களுக்கு எதிரானவன் என்று’ என பூர்ணிமா தற்போது பல்டி அடித்துள்ளார்.

அதேபோல் அவர் ரவீனாவிடம் பேசும்போது கூட பிரதீப்பால் நமக்கு ஆபத்து வரும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை, அவனால் சில அசெளகரியங்கள் இருந்தது, ஆனால் எந்த நேரத்திலும் பிரதீப்பால் பெண்களுக்கு ஆபத்து என சொல்லவே இல்லை. ஆனால் கமல் சார் தான் பிரதீப் செய்ததை பொறுக்க முடியாமல் ரெட் கார்டு கொடுத்து அனுப்பி விட்டார் என்று பூர்ணிமா கூறியுள்ளார்.

மொத்தத்தில் பிரதீப் வெளியேறிய பழியை கமல் மீது மாயா கேங் போடுவதை போல் தெரிகிறது என்பதால், இதற்கு வரும் சனி ஞாயிறு தினங்களில் கமல் என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.