மாயா தான் இந்த வார எலிமினேஷன்.. கமலிடம் அடித்து கூறிய பூர்ணிமா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த வாரம் மாயா தான் எலிமினேட் ஆவார் என்று கமலிடம் பூர்ணிமா கூறியது சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று கமல் எபிசோடு என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் கமல், போட்டியாளர்களை பார்த்து பூகம்பம் பெரிசாக தாக்கி இருக்குது, நாமினேட் ஆனவர்கள் எல்லோரும் சேர்ந்து உட்காருங்கள் என்று கமல்ஹாசன் கூற அனைவரும் சேர்ந்து உட்காருகிறார்கள்.
இந்த நிலையில் எத்தனை பேர் போகிறார்கள்? எத்தனை பேர் வருகிறார்கள்? என்று விஷ்ணு அதிகபிரசங்கித்தனம் கேட்க, வின்னர் யார்? என்று கூட கேட்பீர்கள் போல என்று கூறிய கமல்ஹாசன், எல்லாம் தெரிய வேண்டுமென்றால் இங்கே வாருங்கள் என்று கமல் அழைப்பு விடுக்க, விஷ்ணு கைகூப்பி கும்பிட்டு வர மறுத்துவிட்டார்.
இதனை அடுத்து, ’யார் வெளியே போவார்கள் என்று நினைக்கிறீர்கள் என கமல்ஹாசன் கேட்க அதற்கு பூர்ணிமா, மாயா வெளியே போக வாய்ப்பு இருப்பதாக கூறினார். மாயாவும் பூர்ணிமாவும் நெருங்கிய தோழிகளாகவும் புல்லிங் குரூப்பின் முக்கிய அங்கத்தினர்களாகவும் இருக்கும் நிலையில் அவர் கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதன்பின்னர் பிராவோ மற்றும் அக்ஷயா ஆகிய இருவரும் தாங்கள் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள்.
இந்த நிலையில் இன்று யார் வெளியே போகிறார்கள் என்பதை கமல் பார்வையாளர்களிடம் அட்டையை காண்பிப்பதுடன் இன்றைய ப்ரமோ வீடியோ முடிவுக்கு வந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com