என்னை யூஸ் பண்ணி கசக்கி தூக்கி போட்டுட்டிங்க.. பூர்ணிமா குற்றஞ்சாட்டுவது யாரை?
Send us your feedback to audioarticles@vaarta.com
என்னை யூஸ் பண்ணி கசக்கி தூக்கி போட்டு விட்டீர்கள் என பூர்ணிமா சக போட்டியாளர் ஒருவரை குற்றம் சாட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 93 நாள் ஆகியுள்ள நிலையில் இன்றைய டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளரும் வேறு ஒரு ஒருத்தரை தேர்வு செய்து அவருடைய பயணத்தை பற்றி சொல்ல வேண்டும் என்று பிக் பாஸ் அறிவிக்கின்றார்
இதனை அடுத்து விசித்ரா அனைவரும் எதிர்பார்த்தபடியே தினேஷை தேர்வு செய்து அவரை பற்றி விளக்குகிறார். அதன்பின்னர் அர்ச்சனா குறித்து மாயாவும், மாயா குறித்து மணியும் பேசுகின்றனர்,.
இதை அடுத்து பூர்ணிமா, விஷ்ணு குறித்து கூறிய போது ’என்ன வேண்டுமானாலும் செய்து ஒரு விஷயத்தை நீங்கள் அடைவீர்கள் என்பது எனக்கு தெரிந்தது. என்னை நம்புங்கள், அவர் கண் கலங்கி அழுததை நான் பார்த்தேன். இந்த வீட்டிலேயே அதிகப்படியாக உங்களால் பயன்படுத்தப்பட்டது நான்தான். என்னை நன்றாக யூஸ் பண்ணி விட்டு கசக்கி தூக்கி போட்டு விட்டீர்கள்’ என்று கூறினார்
அப்போது விஷ்ணு ’எல்லாரையும் யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்டது நீ’ என்று விஷ்ணு அதுக்கு பதிலடி கொடுக்கிறார். அப்போது மாயா ’பாயிண்ட்ஸ் எல்லாம் வேஸ்ட் பண்ணாதீர்கள்’ என்று சொல்ல ’உன் பாய்ண்ட்ஸ் எல்லாம் எனக்கு தேவையில்லை’ என்று விஷ்ணு பதிலடி கொடுக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments