நெருங்கிய தோழியாக இருந்தாலும் பூர்ணிமாவை கண்டு கொள்ளாத இந்துஜா.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,November 29 2023]

நடிகை இந்துஜா சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றபோது நெருங்கிய தோழியான பூர்ணிமாவை சரியாக கண்டு கொள்ளவில்லை என்று பூர்ணிமா புலம்பியது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

’பார்க்கிங்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகிய இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றனர் என்பது தெரிந்ததே. இந்துஜா மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் என்றும் நெருங்கிய தோழிகள் என்றும் கூறப்படும் நிலையில், இந்துஜா பிக் பாஸ் வீட்டிற்கு சென்றபோது பூர்ணிமாவிடம் மிகவும் நெருக்கமாக காட்டிக்கொள்ளவில்லை. சாதாரணமாக மற்ற போட்டியாளர்களிடம் பேசுவது போல் தான் பூர்ணிமாவிடம் பேசினார்.

இது குறித்து பூர்ணிமா, மாயாவிடம் தனது அதிருப்தியை தெரிவித்தார். நானும் இந்துஜாவும் மிகவும் நெருங்கிய தோழிகள், ஆனால் என்னை அவர் கண்டு இல்லாமல் இருப்பது எனக்கு சந்தேகத்தை அளித்துள்ளது. வெளியே என் மீது நெகட்டிவிட்டி அதிகமாக இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று கூறுகிறார்.

மேலும் இந்த இந்துஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூர்ணிமாவை அன்ஃபாலோ செய்து விட்டதாகவும் நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர். மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு வெளியே நெகட்டிவிட்டி அதிகமாக இருக்கும் நிலையில் தனது படம் வெளியாகும் நேரத்தில் பூர்ணிமாவுடன் நெருக்கம் காட்ட வேண்டாம் என்று இந்துஜா நினைத்திருக்கலாம் என்றும் நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்

நெருங்கிய தோழியான பூர்ணிமாவை இந்துஜா கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யுங்கள்.