எங்க அம்மா அப்பவே சொன்னாங்க.. மாயாவிடம் புலம்பும் பூர்ணிமா..!
- IndiaGlitz, [Monday,November 13 2023]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று ஐஷு எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது எபிசோடு பார்த்த அனைவரும் தெரிந்ததே.
ஐஷு வெளியே போனவுடன் மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருக்கும் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் பூர்ணிமா மாயாவிடம் ’இப்ப எனக்கு பிக்பாஸ் வீட்டை விட்டு போக வேண்டும் என்பது போல் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த பெயரோடு போகக்கூடாது. நான் வெளியே வைத்திருந்த நல்ல பேரை எல்லாம் கெடுத்துவிட்டேன்.
என் வீட்டில் பிக் பாஸ் வீட்டிற்கு போக வேண்டாம் என்று சொன்னார்கள். இருக்கிற பெயரையும் கெடுத்து கொள்ளாதே, இருக்கிற பெயரை வைத்துக்கொண்டு முயற்சி செய் என்று கூறினார்கள். குறிப்பாக என் அம்மாவுக்கு பிக் பாஸ்க்கு நான் செல்வது சுத்தமாக படிக்கவில்லை, உனக்கு ஓரளவுக்கு நல்ல பெயர் இருக்கு, பத்து பேருக்கு தெரிஞ்சாலும் நல்லதா தெரியுது, அப்படியே வச்சுக்கிட்டு இதை வைத்து என்ன பண்ண வேண்டுமோ அதை பண்ணு, பிக் பாஸ் வேண்டாம், ஏதாவது மிஸ் ஆயிடுச்சுன்னா பெரிய பிரச்சனையாகிடும் என்று சொன்னதாக பூர்ணிமா மாயாவிடம் கூறினார்.
பூர்ணிமாவின் குணம் தெரிந்து அவருடைய அம்மா முன்கூட்டியே யூகித்து சொல்லியிருக்கிறார். அவர் பயந்தது மாதிரியே பூர்ணிமாவுக்கு தற்போது கொஞ்சம்நஞ்சம் இருந்த நல்ல பெயரும் போய்விட்டதாகவும், இப்பவும் ஒன்னும் மோசமில்லை, இனிமேலாவது மனசாட்சிக்கு பயந்து சரியாக விளையாடினால் பூர்ணிமாவை கொண்டாட தயார் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Live started with #Maya and #Poornima conversation
— Sekar 𝕏 (@itzSekar) November 12, 2023
Poornima says enga veetu la #BiggBoss7Tamil poga vendam
sonnanga #BiggBoss7 #biggbosstamil7#BiggBossTamilSeason7 pic.twitter.com/rhaIO85I6E