விசித்ராவிடம் கேட்ட சாரி.. அர்ச்சனாவிடம் கொஞ்சல்: அம்மாவின் செயல் பார்த்து பூர்ணிமா அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபேமிலி வருகை தரும் வாரம் என்பதால் சென்டிமென்டாக இருக்கும் என்பது மட்டுமின்றி வெளியில் நடக்கும் சில விவரங்களை போட்டியாளர்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்புகளும் உள்ளது.
அந்த வகையில் பூர்ணிமாவின் அம்மா இன்று பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நிலையில் விசித்ராவிடம் அவர் சாரி கேட்கிறார். ’என் பொண்ணு உங்கள தெரியாமல் மனதை கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறுகிறார். இதை பார்த்து பூர்ணிமா அதிர்ச்சி அடைகிறார். அடுத்த அதிர்ச்சியாக அர்ச்சனாவை பார்த்து ’என் கண்ணு’ என்று அவரை கட்டிப்பிடித்து கொஞ்சுகிறார். இதை பார்த்து பூர்ணிமாவுக்கு மேலும் அதிர்ச்சி ஆகிறது.
இதனை அடுத்து அர்ச்சனாவின் அம்மா ’இவங்களுக்கு நடுவுல நீங்க ரொம்ப பாவம், மாட்டிகிட்டீங்க’ என்று விசித்ராவை கூறுகிறார். அதேபோல் விக்ரம் சரவணன் அப்பா காமெடியாக பேசுவதும், மணி, ரவீனா காதல் குறித்து விஜய் வர்மாவின் அம்மா கிண்டலுடன் பேசும் காமெடி காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.
அதேபோல் பூர்ணிமாவின் அம்மா மாயாவிடம் ஒன்னும் ஒன்னும் ரெண்டு தான் என்பதை சொல்லு என்று கேட்க அதை மாயா சொல்ல, ஆட்டம் பாட்டத்துடன் ஒரே கொண்டாட்டமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments