பூர்ணிமாவுக்கும் லவ் வந்துருச்சு.. அதுவும் இவர் மேலயா? என்ன ஒரு ஃபீலிங்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஏற்கனவே இரண்டு காதல் ஓடிக்கொண்டிருந்த நிலையில் தற்போது மூன்றாவதாக பூர்ணிமாவுக்கும் லவ் வந்துவிட்டதாக வெளியாகி இருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே மணி சந்திரா மற்றும் ரவீனா காதல் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை நிக்சன் மற்றும் ஐசுவும் காதலிப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது திடீரென விஷ்ணுவிடம் பூர்ணிமா தனக்கு ஒரு ஃபீலிங் இருப்பதாகவும் உங்களுக்கும் அதே போன்ற பீலிங் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றும் கேட்டு உள்ளார்.
இன்றைய புரமோ வீடியோவில் பூர்ணிமா விஷ்ணுவிடம் ’இப்ப ஒரு விஷயம் நீங்க பண்றீங்க இல்ல, அது மாதிரி இருந்தால் எனக்கு பிடிச்சிருக்கு, இப்ப நான் ஓபனா ஒரு விஷயத்தை சொல்லட்டா, எனக்கு ஒரு ஃபீலிங் இருக்கு ,எனக்கு என்ன தோணுதோ நான் அதை சொல்றேன், நீங்க இல்லனா இல்லைன்னு சொல்லுங்க, இருக்கு நான் இருக்குன்னு சொல்லுங்க என்று கூறியவர் எனக்கு ஒரு ஃபீலிங் இருக்கிறது நீங்களும் அதை பண்றீங்களா’ என பூர்ணிமா கேட்பதோடு இன்றைய புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.
வலிமையான போட்டியாளரான விஷ்ணுவை காதல் வலையில் வீழ்த்தி வெளியேற்ற பூர்ணிமா செய்யும் சதியா? அல்லது உண்மையாகவே வந்த காதலா என்ற கேள்வி தற்போது பார்வையாளர்களுக்கு வந்துள்ளது. பூர்ணிமாவை நம்ப வேண்டாம் என்றும் பார்வையாளர்கள் விஷ்ணுவுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.
#Day46 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 16, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/ePAgw0e2M2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments