ஒரு ஆசிரியர் ரெண்டு பேரையும் ஒண்ணா நடத்தனும்: கமலை சாடிய பூர்ணிமா..!

  • IndiaGlitz, [Wednesday,November 22 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை போட்டியாளர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி கொண்டாலும் கமல்ஹாசனை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குற்றம் சாட்டியதே இல்லை. ஆனால் முதல் முறையாக பூர்ணிமா கமல்ஹாசனின் நடுநிலை குறித்து சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’நாங்கள் செய்வது புல்லிங் என்றால் அவர்கள் செய்வதும் புல்லிங் தானே என்ற கேள்விக்கு கமல் எந்த பதிலையும் சொல்லவில்லை’ என டைட்டில் வின்னர் கனவில் இருக்கும் விக்ரம் சரவணனிடம் பூர்ணிமா கூறுகிறார். ’என்னுடைய பிளாக்கை கலாய்க்க தெரிந்த கமல்ஹாசனுக்கு அவர்கள் செய்த தவறை ஏன் சுட்டிக் காட்டவில்லை’ என்றும் கூறினார்.

ஒரு ஆசிரியர் என்றால் இரண்டு மாணவர்கள் தப்பு செய்தால் ஒருவரை பார்த்து ’ஏண்டா இப்படி செய்தாய்’ என்று கேட்டுவிட்டு, இன்னொருவரை பார்த்து ’இப்படி செய்யாதே’ என சாதுவாக கூறினால் அது எப்படி நடுநிலை ஆகும். எனக்கு மனது ஆறவே இல்லை.

நான் முடிவு செய்துவிட்டேன். என்ன வேணா பண்ணட்டும், நான் பேசுவதை நிறுத்தப் போவதில்லை. இதனால நான் வெளியே போனாலும் பிரச்சனை இல்லை, நல்ல பெயரோடு வெளியே போக வேண்டும்’ என்று அவர் கூறினார்.

முதல்முறையாக பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் கமல்ஹாசனின் நடுநிலையை நேரடியாக குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு கமல்ஹாசன் என்ன பதில் சொல்வார் என்பதை வரும் சனிக்கிழமை பார்ப்போம்.