பணப்பெட்டியை எடுத்து சென்றவுடன் பூர்ணிமா வெளியிட்ட முதல் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா 95 வது நாளில் 16 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த 95 நாட்களில் பூர்ணிமா பெரும்பாலும் நெகட்டிவ் இமேஜ் தான் பார்வையாளர்களிடம் பெற்றிருக்கிறார் என்றும் மாயாவுடன் சேர்ந்து அவர் அடித்த கொட்டம், சக போட்டியாளர்களுக்கு கொடுத்த டார்ச்சர்கள், குறிப்பாக பிரதீப் அந்தோணியை வெளியேற்ற போட்ட திட்டம், விக்ரம், நிக்சன் உள்பட ஒரு சில போட்டியாளர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து காரியத்தை சாதித்தவுடன் கழட்டிவிட்டது என பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானார்.
இந்த நிலையில் ஒரு வழியாக அவர் இறுதி போட்டிக்கு செல்லாமல் பணப்பெட்டியை எடுத்துச் சென்று விட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவுடன் அவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் முதல் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான நெகட்டிவ் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. இந்த நெகட்டிவ் இமேஜ் மாற சில காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
GIRL is enjoying her life right now💥💥
— sheyla (@rukmini_diva) January 5, 2024
noone can break your confidence right now...
ENJOY THIS MOMENT #POORNIMA
you are the STAR of this day💗💗😍😍💥💥💗⭐️⭐️#BiggBossTamil7 pic.twitter.com/P3rhtms8YL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments