முயலை தூன்னு துப்பி கொடுத்த பூர்ணிமா.. இதையாவது கேட்பாரா கமல்?
- IndiaGlitz, [Tuesday,December 26 2023]
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா, மணியிடம் முயலை கொடுக்கும்போது அதை தூன்னு துப்பி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அவருக்கு பார்வையாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
ஒரு டாஸ்க்கில் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி போடுவதில் தப்பில்லை, ஆனால் டாஸ்கில் தோற்கும் நிலை வரும் போது மிகவும் மோசமாக நடந்து கொள்வது பூர்ணிமா மற்றும் மாயாவுக்கு சர்வசாதாரணமாக இருந்து வருகிறது. ஆரம்பம் முதலே இருவரும் ஒரு சிலரிடம் வெறுப்புணர்ச்சியை காட்டி வருகின்றனர் என்பதும் அவர்களுடைய உடல் மொழி மற்றும் பேச்சு மொழி ஆகியவை அருவருக்கத்தக்க வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
இருப்பினும் பிக் பாஸ் மற்றும் கமல்ஹாசன் ஆதரவினால் கிட்டத்தட்ட இறுதிப்போட்டி வரை இருவரும் வந்துவிட்டனர். அவர்கள் குரூப்பாக இருப்பதால் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் இருந்தும் தப்பித்து விடுகின்றனர். இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் பூர்ணிமா தனது கையில் இருக்கும் முயலை துப்பி அதை மணியிடம் கொடுக்கிறார்/ அதுவும் கையில் கொடுக்காமல் தூக்கி போடுகிறார்
அது மட்டும் இன்றி மாயா மற்றும் தன்னுடைய குரூப்பினர்களிடம் இதுகுறித்து கூறிய போது, ‘மணியிடம் கொடுக்கும்போது அதை தூன்னு துப்பி கொடுத்தேன் என்று பெருமையாக கூற அதை கொஞ்சம் கூட கண்டிக்காத விசித்ரா கூட சிரித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது அவரும் இந்த குரூப்பில் ஐக்கியமாகி விட்டார் என்று தான் தெரிகிறது.
ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்றால் என்ன என்ற அடிப்படை கூட தெரியாமல் பூர்ணிமா விளையாடி வருவதாக பார்வையாளர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் துப்பி கொடுத்ததை கேமரா படம் பிடித்திருக்குமோ? வார இறுதியில் நாம் மாட்டிக் கொள்வோமோ? என்று பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் தனியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு பூர்ணிமா தன்னை தானே தேற்றி கொள்ளும் வகையில் ’நான் என்ன அவன் மூஞ்சியிலயா துப்பினேன், முயல் மீது தான் துப்பினேன்’ என்று கூறுவதும் இன்றைய நிகழ்ச்சியில் உள்ளது.
Such a cheap and worst behaviour
— Sekar 𝕏 (@itzSekar) December 26, 2023
By poornima 🤬
Your thoughts about poornima these activities?
Mr Host itha address pannalana avlotha ....#BiggBossTamil7 #BiggBoss7Tamilpic.twitter.com/USfXg91ySD