திருமணத்திற்கு முன்பே ஜோடியாக இருக்கும் பாக்யராஜ்- பூர்ணிமா… வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் ஆதர்ச நட்சத்திர ஜோடிகளாக வலம்வரும் நடிகர் பாக்யராஜ் –பூர்ணிமா தம்பதிகளின் திருமணத்திற்கு முந்தைய புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகர் பாக்யராஜ் 80களில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். இவருடைய இயக்கத்தில் வெளியான “டார்லிங் டார்லிங் டார்லிங்“ எனும் திரைப்படத்தில் நடித்து பாக்கியராஜ்க்கு அறிமுகமானவர்தான் நடிகை பூர்ணிமா. ஏற்கனவே மலையாளத்தில் கிட்டத்தட்ட 40 திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை பூர்ணிமா தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்தபோதே நடிகர் பாக்யராஜை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டதாக ஒரு பேட்டியில் அவரே தெரிவித்துள்ளார்.
மேலும் முதல் மனைவி பிரவீணா உடல்நலக் குறைவால் இறந்த நிலையில் கடும் சோகத்தில் இருந்துவந்த நடிகர் பாக்யராஜ் பலரும் வற்புறுத்தியபோது நடிகை பூர்ணிமாவையே தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இப்படி ஆத்மாத்மார்த்த அடிப்படையில் இணைந்த நடிகர் பாக்யராஜ்- பூர்ணிமா ஜோடியினர் திருமணத்திறகு முன்பு “உங்கள் வீட்டு பிள்ளை“ படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்துக்கொண்டபோது புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
இந்தப் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நடிகை பூர்ணிமா 38 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம். இதில் நடிகர் பிரபு, சாருஹாசன் சார், ஒய்.ஜி. மகேந்திரன், விஜயக்குமார், இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1984 இல் திருமணம் செய்துகொண்ட நடிகர் பாக்யராஜ்- பூர்ணிமா தம்பதிகளுக்கு தற்போது சரண்யா, சாந்தனு எனும் இரண்டு பிள்ளைகள் இருப்பதும் இதில் சாந்தனு தமிழ் சினிமாவில் நடித்துவருவதும் ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே ஜோடியாக புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாக்யராஜ்- பூர்ணிமா புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments