நைட்டுக்கு மாயா வேணுமா பிராவோ: பூர்ணிமாவின் அதிர்ச்சி கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதீப் மீது குற்றஞ்சாட்டி வெளியே அனுப்பி வைத்த மாயா மற்றும் பூர்ணிமா குரூப் தற்போது எல்லை மீறி இரட்டை அர்த்தங்களில் ஆண்களிடம் பேசுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வைல்ட் காடு என்ட்ரி போட்டியாளராக வந்த பிராவோவிடம் பூர்ணிமா ’நைட்டுக்கு மாயா வேணுமா என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிராவோ அதை புரிந்து கொண்டாரோ என்னவோ தெரியவில்லை, அதற்கு அவர் ‘இல்லைங்க’ என்று அவர் கூறும் காட்சியும் வீடியோவில் உள்ளது.
இதையடுத்து ‘அது என்ன நைட்டுக்கு’ என்று மாயா கேட்க பூர்ணிமா வேறொரு அர்த்தத்தில் சிரிக்கிறார். இதை பார்க்க நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சி அடைந்து இருவருக்கும் சரமாரியாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கமல்ஹாசன் இந்த வாரம் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் பூர்ணிமா மற்றும் மாயா இருவரையும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிவிட்டு பிரதீப்பை மீண்டும் உள்ளே கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் பெண்களின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று பிரதீப்பை விரட்டியடித்தது போல் ஆண்களின் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கும் பூர்ணிமா மற்றும் மாயாவையும் விரட்டி அடிக்க வேண்டும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Ofcourse… Men’s safety isn’t a big issue right ? #MayaKrishnan #PradeepAntony #RedCard #BiggBoss7tamil pic.twitter.com/bL1j1sNzzC
— Aishwarya (@iiiishooo) November 7, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com