மாயாவுடன் சண்டை, பிக்பாஸ் வீட்டு பொருட்களை உடைக்கும் பூர்ணிமா.. என்ன ஆச்சு புல்லிங் குரூப்பில்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதல் பூர்ணிமா மற்றும் மாயா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகளாக இருக்கும் நிலையில் இன்று திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இன்று கரன்சி டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த கரன்சி டாஸ்க்கில் கரன்சியை பகிர்ந்து கொள்வதில் போட்டியாளர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பிக் பாஸ் அவர்களை திட்டும் காட்சியின் வீடியோ இரண்டாவது புரமோவாக உள்ளது
’இந்த வீட்டில் இருக்கும் யாருக்கும் விதிமுறைகளை மதிக்கும் தன்மை இல்லை என்று எனக்கு இப்போது தெளிவாக தெரிகிறது. எனக்கு பெரும் ஏமாற்றம்’ என்று கூறுகிறார். கரன்சியை பகிர்ந்து கொள்வதில் மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அனைத்து கரன்சிகளையும் பூர்ணிமா தட்டி விட்டு விட்டு ஆத்திரத்துடன் வெளியே செல்கிறார். அப்போது அவர் பிக் பாஸ் வீட்டின் பொருள்களையும் உடைக்கும் காட்சிகள் உள்ளது. இந்த நிகழ்வுக்கு தான் பிக் பாஸ், போட்டியாளர்களை கடுமையாக திட்டுகிறார்.
காலையில் வெளியான முதல் புரமோவில் டான்ஸ் மாரத்தான் என்ற கலகலப்பான டாஸ்க் காட்சிகள் இருந்த நிலையில் இப்போது திடீரென போட்டியாளர்கள் மத்தியில் அதிலும் புல்லிங் குரூப் என்று கூறப்படும் மாயா மற்றும் பூர்ணிமா இடையே சண்டை வந்திருப்பது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com