எல்லாரையும் பேட்டி கொடுத்து கேவலமா பேசுவான்: பிரதீப் குறித்து பூர்ணிமா குரூப்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப்பை அனைவரும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிவிட்ட நிலையில் பிரதிப் போன சந்தோஷத்தை பூர்ணிமா, மாயா உள்பட பெண்கள் குரூப் கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பிரதீப் வெளியேற்றம் குறித்து பூர்ணிமா, மாயா, அக்சயா, அன்னபாரதி உள்ளிட்டோர் பேசும் காட்சி உள்ளது.
இதில் மாயா ’பிரதீப் வெளியே போனவுடன் எல்லோருக்கும் இன்டர்வியூ கொடுப்பான், தேவையில்லாம பேசுவான், கிழிகிழின்னு கிழிப்பான் என்று கூறுகிறார். அப்போது அன்னபாரதி ’அவர் என்ன பேசினாலும் மக்களுக்கு தெரியும் தானே’ என்று கூறிய போது மாயா ’நமக்கு அது ஒன்றும் பிரச்சனை இல்லை, ஆனால் அவன் பேசுவான் என்று சொல்கிறேன் என்று கூறுகிறார்
இதற்கு முன் சரவணன் உள்பட ஒரு சிலர் வெளியேறியபோது சக போட்டியாளர்களாக பலர் வருத்தம் தெரிவித்தனர். ஆனால் பிரதீப் வெளியேற்றத்தை பூர்ணிமா குரூப் கொண்டாடி வருவதை அடுத்து திட்டமிட்டு தான் அவரை வெளியேற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் பிரதீப் வெளியேறியதை அடுத்து ஒரு பெரிய போட்டியாளர் வெளியேறிவிட்டதாக நினைத்து அனைவரும் கூத்தும் கும்மாளம் அடிப்பது போல் தான் இருப்பதாக பார்வையாளர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
Maya and co says #Pradeep ellarayum interview la kilipa #PradeepAntony #BiggBossTamil7 #BiggBossTamilpic.twitter.com/K5TRngBehh
— Sekar 𝕏 (@itzSekar) November 4, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com