மிஷ்கின் படத்தில் பிசாசாக நடிக்கும் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Thursday,December 17 2020]

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த ’பிசாசு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது 6 வருடங்கள் கழித்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்க இருக்கிறார். ‘பிசாசு 2’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் பூஜையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பதும் கார்த்திக் ராஜா கம்போஸ் செய்த ஒரு பாடலை சூப்பர் சிங்கர் டைட்டில் பட்டம் பெற்ற பிரியங்கா பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’பிசாசு 2’ படத்தில் ஏற்கனவே முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இந்த படத்தில் பிசாசாக நடிப்பவர் நடிகை பூர்ணா என்ற தகவல் வெளிவந்துள்ளது. ’விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ என்ற படத்தில் அறிமுகமாகி சமீபத்தில் வெளியான ‘காப்பான்’ படங்கள் வரை பல வெற்றி படங்களில் நடித்த பூர்ணா, மிஷ்கின் படத்தில் இணைந்துள்ளது அந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

மேலும் ’பிசாசு’ முதல்பாகத்தில் பிரயாகா மார்டின் பிசாசாக நடித்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தில் பூர்ணா பிசாசாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது