வெளி மாநில கூலி தொழிலாளர்களை கொடுமைப்படுத்திய உ.பி போலீசார்..!
- IndiaGlitz, [Thursday,March 26 2020]
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசானது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த கொரோனா நோயினை பரவாமல் கட்டுப்படுத்த அரசானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக நாடு தழுவிய ஊரடங்கினை 21 நாட்களுக்கு செயல்படுத்தியுள்ளது.
திடீரென்று இந்த ஊரடங்கு தொடங்கப்பட்டதால் வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்த கூலி தொழிலாளிகள் வேலை பார்த்து வந்த மாநிலத்திலேயே மாட்டிக் கொண்டனர். அவர்களது சொந்த மாநிலத்திற்கும் அவர்களது வீடுகளுக்கும் செல்ல அவர்களுக்கு பேருந்து வசதியும் எந்த அரசும் செய்து தரப்படவில்லை. தமிழக அரசானது வெளி மாநிலத்தில் கூலி வேலை செய்யும் தொழிலார்களின் வீடுகளினை கண்டறிந்து அரிசி, பருப்பு வழங்க போவதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பலர் தங்கள் சொந்த மாநிலத்திற்கு நடந்து செல்ல தொடங்கியுள்ளனர். இப்படி உத்திரப்பிரதேசத்தில் நடந்து செல்லும் மத்தியப்பிரதேச கூலி தொழிலார்களை உத்திரப்பிரதேச காவல்துறையானது தவளையை போல தாவி செல்ல சொன்ன வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. வெளி மாநில தொழிலாளிகளுக்கு உதவ சொன்னால் இப்படி அவர்களை கொடுமைப்படுத்துகிறீர்களே என கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.