திருமணமான அடுத்த நாளே ஆபாச வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை

  • IndiaGlitz, [Sunday,September 13 2020]

பிரபல நடிகை பூனம் பாண்டே தனது நீண்டநாள் காதலர் சாம் பாம்பே என்பவரை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது என்பது தெரிந்ததே. பூனம் பாண்டேவும் தனது திருமணக் கோலத்துடன் உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்தார் என்பதும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் திருமணமான ஒரே நாளில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாணமாக அந்த வீடியோவில் அவர் தோற்றமளிப்பதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். 

திருமணத்திற்கு முன்னர் அடிக்கடி ஆபாச வீடியோக்களை வெளியிட்ட பூனம் பாண்டே, திருமணத்திற்கு பின்னராவது இதுபோன்ற வீடியோக்களை தவிர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் அதுவும் திருமணத்திற்கு அடுத்த நாளே அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோவை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.