என்னை யாரும் கைது செய்யவில்லை, நான் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்: பூனம் பாண்டே

  • IndiaGlitz, [Tuesday,May 12 2020]

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டதாக பல ஊடகங்களில் செய்தி வெளியானது. மும்பையில் தனது ஆண் நண்பருடன் அவர் ஊரடங்கு நேரத்தில் அவசியம் இன்றி சுற்றி தெரிந்ததாகவும் இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவு மீறல் மற்றும் நோயை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும் அவரது விலையுயர்ந்து பிஎம்டபிள்யூ கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து பூனம் பாண்டே தனது சமூக வலைப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். தான் மும்பையில் நேற்று கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றும் தன்னை யாரும் கைது செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தான் நேற்று மட்டும் மூன்று திரைப்படங்கள் பார்த்ததாகவும் அவை மூன்றும் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பூனம் பாண்டேவின் இந்த வீடியோவை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக வெளி வந்த தகவல் வதந்தி என்பது உறுதியாகி உள்ளது. பூனம் பாண்டே கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில் தற்போது அவரது வீடியோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மன்மோகன்சிங் அவர்களின் கொரோனா பரிசோதனை முடிவு!

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பாரத பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்கள் சமீபத்தில் திடீரென நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நெருக்கடியை ஏற்படுத்த இருக்கும் WHO வின் உலக மாநாடு!!! என்ன நடக்கும்???

உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவல் கடும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வெளிநாட்டில் இறந்த கணவர்: ஒரு மாதத்திற்கு பின் கணவர் உடலுடன் சென்னை திரும்பிய இளம்பெண் 

ஒரு மாதத்திற்கு முன் வெளிநாட்டில் மாரடைப்பால் இறந்த கணவரின் உடலுடன் இளம்பெண் ஒருவர் சென்னை திரும்பிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்: மீண்டும் சென்னையில் 500க்கும் மேல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை

தனுஷ் நாயகியின் காதலர் இவர்தான்: வெளியானது புகைப்படம்

தனுஷ் நடித்த 'ஆடுகளம்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை டாப்சி அதன்பின் ஒரு அஜித் நடித்த 'ஆரம்பம்' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நாயகியாக நடித்தார்.