பூனம் பாஜ்வாவுக்கு திருமணம் நடந்தது உண்மையா? அவரே விளக்குகிறார்
- IndiaGlitz, [Sunday,May 01 2016]
சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை பூனம் பாஜ்வாவுக்கும் பிரபல தெலுங்கு இயக்குனர் சுனில்ரெட்டிக்கும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் ரகசிய திருமணம் நடந்ததாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் இந்த செய்தியை பூனம் பாஜ்வா மறுத்துள்ளார். 'சமீபத்தில் எனது சகோதரிக்குத்தான் திருமணம் நடந்தது. ஆனால் பலர் எனக்கு திருமணம் நடந்ததாக தவறான செய்தியை பரப்பியுள்ளனர். எனக்கு இதுவரை யாருடனும் திருமணம் நடைபெறவில்லை. எனது திருமணத்தை சரியான நேரத்தில் நானே அறிவிப்பேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் சுனில் ரெட்டி தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்றும் அதைத்தவிர அவருடன் வேறு எந்த உறவும் இல்லை என்றும் கூறியுள்ளார். தற்போது பூனம் பாஜ்வா சுந்தர் சி நடிக்கும் 'முத்தின கத்தரிக்கா' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.