பிக்பாஸ் வீட்டிற்குள் புதியதாக நுழையும் விஜய் பட நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போது இருக்கும் போட்டியாளர்களில் யாரும் பார்வையாளர்களின் மனதை தொடாத நிலையில் பிக்பாஸ் ஸ்கிரிப்டில் புதிய போட்டியாளர்கள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கமல்ஹாசனும் கடந்த வாரம் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை போல் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை பிரபல நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார் என்பது தெரிந்ததே. தற்போது பிக்பாஸ் தெலுங்கு வீட்டிற்குள் நடிகை பூஜா ராமச்சந்திரன் வைல்ட் கார்ட் போட்டியாளராக செல்லவுள்ளார். இந்த தகவலை பூஜா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
பூஜா ராமச்சந்திரன் விஜய் நடித்த 'நண்பன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பீட்சா', உதயநிதி நடித்த 'நண்பேண்டா' உள்பட பல தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் பூஜா நுழைய போவது போல் தமிழ் பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் பிரபல நடிகை நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Here I come Bigg Boss Telugu Season2....need all your support with love....#Biggboss2 #BiggBosstelugu2 #teluguactress #poojaramchandran #poojaarmy #Biggbossseason2 pic.twitter.com/oeeWdlRU38
— Pooja Ramachandran (@Poojaram22) July 23, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments