சூப்பர் சிங்கர் மேடையில் டிஜேவுக்கு டோஸ் விட்ட பூஜாவின் அம்மா.. உண்மையா? பிராங்க்கா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை சுவாரசியப்படுத்துவது டிஜே பிளாக் என்பதும் அவரது டைமிங் காமெடி மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பூஜாவுக்கு டிஜே பிளாக் போட்ட பாடல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திடீரென பூஜாவின் அம்மா டிஜே பிளாக்கை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளரான பூஜா மீது காதல் வலை வீசும் பாடல்களை அவ்வப்போது டிஜே பிளாக் போட்டு வருகிறார். இந்த நிலையில் பூஜாவின் அம்மா மற்றும் அவருடைய குடும்பத்தினர் இந்த வாரம் மேடை ஏறிய நிலையில் பூஜாவுக்கேற்ற ஒரு பாடலை டிஜே பிளாக் பிளே செய்கிறார். அப்போது பூஜாவின் அம்மா, ‘எனக்கு டிஜே மீது கொஞ்சம் மனம் வருத்தம், எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்குது, அவர் ஒரு பெண் பிள்ளை, எல்லாத்தையும் மனதில் வைத்துக்கொண்டு பாடல் போடணும் என்று பிளாக்கிடம் கோபமாக பேசினார்.
எல்லோருக்கும் போடுகிற மாதிரி தான் பூஜாவுக்கு போட்டேன் என பிளாக் விளக்கம் சொல்ல, ஆனாலும் இது கொஞ்சம் ஓவராக இருக்கிறது என பூஜாவின் அம்மா கடுமையாக கூறினார். இதனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரியங்கா மற்றும் மாகாபா உள்பட அனைவரும் அப்செட் ஆகியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பூஜாவின் அம்மா உண்மையாகவே கோபப்பட்டாரா? அல்லது என்று ரசிகர்களை முட்டாள் ஆக்கும் வகையில் இது பிராங்க் என்று கூறுவார்களா? என்பது நாளைய நிகழ்ச்சியில் தான் தெரிய வரும்.
எனக்கென்னமோ உன் மேல தான் சந்தேகமா இருக்கு.. 😆
— Vijay Television (@vijaytelevision) March 4, 2023
சூப்பர் சிங்கர் Season 9 - இன்று மற்றும் நாளை மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #VijayTV pic.twitter.com/mdXc2ONH8w
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com