சென்னையில் 'பீஸ்ட்' படப்பிடிப்பு: பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்பட்டது
மூன்றாம் கட்டமாக சென்னையில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் மால் ஒன்றில் தீவிரவாதிகள் புகுந்து அப்பாவி மக்களைப் பணயக் கைதியாக வைத்திருப்பது போன்றும், தளபதி விஜய் சாகசங்கள் செய்து அவர்களை காப்பாற்றி தீவிரவாதிகளை அழிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் பூஜா ஹெக்டேவும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட படப்பிடிப்பில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்ததால் நடிகை பூஜா ஹெக்டே மும்பை திரும்பியதாக தகவல் வெளிவந்துள்ளது., விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ’தளபதி விஜய் அவர்களுடன் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் தற்போது மூன்றாம் கட்ட சென்னை படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் இதனையடுத்து தான் மும்பை செல்வதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற இருப்பதாகவும், இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
Its very good to be working with #ThalapathyVijay says our #Beast beauty #poojahegde! Papped at Mumbai, post wrapping shoot for her 3rd schedule in Chennai.@actorvijay @hegdepooja pic.twitter.com/4IunDK8fkS
— #BEAST (@BeastMovieoff) August 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments