'பீஸ்ட்' படப்பிடிப்பிற்காக சென்னை வந்த பூஜா ஹெக்டே: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,September 29 2021]

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று முதல் தொடங்கியது என்பதையும் நேற்றைய படப்பிடிப்பில் விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் இன்று முதல் பூஜா ஹெக்டே கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து நேற்று அவர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய காட்சியின் புகைப்படங்கள் பூஜாவின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படப்பிடிப்புடன் பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் சிரஞ்சீவியுடன் ’ஆச்சாரியா’, பிரபாஸுடன் ’ராதே ஷ்யாம்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.