பூஜா ஹெக்டேவின் 'நெகட்டிவ்' போஸ்ட்டுக்கு குவிந்த 5 லட்சம் லைக்ஸ்கள்!

  • IndiaGlitz, [Wednesday,May 05 2021]

பிரபல தெலுங்கு நடிகையும் ’தளபதி 65’ படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே பதிவு செய்த இன்ஸ்டாகிராம் ‘நெகட்டிவ்’ போஸ்ட் ஒன்றுக்கு 5 லட்சம் லைக்ஸ்கள் ஒருசில மணி நேரத்தில் குவிந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ படத்தின் நாயகி பூஜா ஹெக்டே சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவர் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக அறிவித்து உள்ளார்

சமீபத்தில் அவர் எடுத்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் தனக்கு ‘நெகட்டிவ்’ ரிசல்ட் வந்ததாகவும் இதனை அடுத்து இந்த மகிழ்ச்சியை அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் குணமாக வேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை அவர் குறிப்பிட்டுள்ளார். உங்கள் அனைவருடைய வாழ்த்துக்கள் தான் தன்னை மேஜிக்காக குணமாக்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பூஜா ஹெக்டேவுக்கு நெகட்டிவ் ரிசல்ட் என்ற தகவல் தளபதி 65 படக்குழுவினருக்கும் சந்தோஷமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பூஜா ஹெக்டே பதிவு செய்த ஒரு சில மணி நேரங்களுக்குள் 5 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.