பிரபல தயாரிப்பாளர் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த பூஜா ஹெக்டே!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மறைவு செய்தியைக் கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
பாலிவுட் திரையுலகின் தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான பிரதீப் குஹா என்பவர் காலமானார். மும்பையிலுள்ள அம்பானி மருத்துவமனையில் அவர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய மனைவி மற்றும் மகன் அவருடைய இறப்பை உறுதி செய்துள்ளனர்
இந்த நிலையில் பிரதீப் குஹா மறைவு குறித்து பிரியங்கா சோப்ரா, மனோஜ் பாஜ்பாய், லாரா தத்தா உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பிரதீப் குஹா அவர்களின் மறைவு செய்தி கேட்டு உண்மையில் அதிர்ச்சி அடைந்தேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் தான் அவரிடம் நான் பேசினேன். அப்போது அவர் எனக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார். மிஸ் இந்தியா பட்டத்திற்கு பின்னர் நான் சினிமாவில் பெரிய நட்சத்திரமாக வருவேன் என்று கணித்தது அவர் ஒருவர் மட்டுமே. அவர் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. அவருடைய மறைவால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்
Absolutely shocked n saddened to hear about the demise of Pradeep Guha,post my Miss India days,he always told me that I was film star material and should think of taking it up!Thank you for believing in me.The industry has lost a stalwart.Sending out loads of light to his family. pic.twitter.com/EDPSYUkptt
— Pooja Hegde (@hegdepooja) August 21, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com