பூஜா ஹெக்டே பகிர்ந்த 'பீஸ்ட்' படப்பிடிப்பு புகைப்படம்: இணையத்தில் வைரல்

  • IndiaGlitz, [Friday,August 20 2021]

தளபதி விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்புக்காக தயாராகும் புகைப்படம் ஒன்றை இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்று வருகிறது. ‘பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே கலந்து கொண்டிருக்கும் நிலையில் பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் படப்பிடிப்பிற்கு தயாராகும் வகையில் மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.