விஜய் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறிய பூஜா ஹெக்டே!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூற வேண்டும் என்று ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்த நிலையில் பூஜா ஹெக்டே விஜய் குறித்து கூறிய அந்த ஒரே ஒரு வார்த்தை தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் அவருக்கு தமிழ் திரையுலகில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு சமீபத்தில் சமூக வலைதளங்கள் மூலம் பதிலளித்த பூஜா, ‘விஜய் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறுங்கள் என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தபோது, ‘விஜய் பற்றி ஒரே ஒரு வார்த்தையில் கூறுவது ரொம்ப கடினம் என்றும் ஆனால் முயற்சி செய்கிறேன் என்று கூறிய அவர் ’இனிமையானவர்’ என்று ஒரே ஒரு வார்த்தையில் பதில் அளித்துள்ளார். விஜய் குறித்து பூஜாவின் இந்த பதில் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவியுடன் ’ஆச்சாரியா’ பிரபாஸுடன் ’ராதேஷ்யாம்’ மற்றும் ரன்பீர் கபூருடன் ’சர்க்கஸ்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே ‘பீஸ்ட்’ படத்தின் ரிலீஸுக்கு பின்னர் தமிழிலும் பிஸியாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com