நெல்சனுக்கு கிடைத்தது எனக்கும் விஜய்க்கும் கிடைக்கல: பூஜா ஹெக்டே 

’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பின் போது நெல்சனுக்கு கிடைத்தது எனக்கும் விஜய்க்கும் கிடைக்கவில்லை என பேட்டி ஒன்றில் பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் தெலுங்கு புரமோஷனுக்காக நெல்சன், அனிருத், பூஜா ஹெக்டே உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர் .

இதில் ’பீஸ்ட்’ படத்தின் மால் செட் படப்பிடிப்பு மட்டும் 20 நாட்கள் நடந்தது என்றும், இந்த இருபது நாட்களில் விஜய்க்கும் எனக்கும் காஸ்ட்யூம் மாறவே இல்லை என்றும், அனைவரும் ஒரே காஸ்ட்யூமில் தான் நடித்தோம் என்றும், ஆனால் நெல்சன் மட்டும் தினந்தோறும் விதவிதமாக காஸ்டியூமில் வந்தார் என்றும் பூஜா ஹெக்டே கலகலப்பாக கூறினார்.

மேலும் நெல்சன் மிகவும் திறமையான, தன்னம்பிக்கையான இயக்குனர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.