'பீஸ்ட்' படத்தில் என்னுடைய கேரக்டர் இதுதான்: பூஜா ஹெக்டே

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் ’பீஸ்ட்’ படம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகை பூஜா ஹெக்டே பதிலளித்தார். ’பீஸ்ட்’ படத்தில் தன்னுடைய கேரக்டரின் பெயர் ப்ரீத்தி என்று கூறிய பூஜா ஹெக்டே, நிஜவாழ்வில் பீஸ்ட் யார் என்று என்னைக் கேட்டால் இயக்குனர் நெல்சன் தான் என்று கூறுவேன் என கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

மேலும் விஜய்யுடன் ரோல்ஸ்ராய்ஸ் காரில் சென்ற அனுபவம் மிகவும் கலகலப்பாக இருந்தது என்றும் அதை என்னால் மறக்கவே முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் பிடித்து ’பீஸ்ட்’ படம் குறித்து பல்வேறு தகவல்களை பூஜா ஹெக்டே தெரிவித்த நிலையில் அந்த தகவல்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.