'பீஸ்ட்' படத்திற்காக களத்தில் இறங்கினார் பூஜா ஹெக்டே! வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,June 26 2021]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’பீஸ்ட்’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது

இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளும் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் குறிப்பாக பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது என்றும் செய்திகள் கசிந்துள்ளது. இதற்காக பிரமாண்டமான செட் ஒன்று தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ’பீஸ்ட்’ படத்திற்காக டான்ஸ் ரிகர்சல் செய்து வருவதாக புகைப்படங்களுடன் ஒரு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களை ஆச்சரியத்தில் உள்ளது. எனவே அடுத்த கட்ட படப்பிடிப்பில் பூஜா கலந்து கொள்வது உறுதி என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த புகைப்படமும் தற்போது வைரல் ஆகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யா தேவி VS ரவுடி பேபி சூர்யா....! யுடியூபில் குழாயடி சண்டையிட்ட சர்ச்சையின் சகோதரிகள்....!

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் தனக்கு  கொலை மிரட்டல் விட்டதாக, சூர்யா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

ரசிகர்களுக்கு 6 மொழிகளில் நன்றி தெரிவித்த ரம்பா: காரணம் இதுதான்!

கடந்த 90களில் தமிழ் உள்பட தென்னிந்திய திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறு மொழிகளில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

அஜித் படத்தில் நடித்திருக்கின்றாரா 'பிரேமம்' அல்போன்ஸ் புத்திரன்?

அஜித் நடித்த 'தீனா' படத்தை அவரது ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அஜித்தை முதன் முதலாக ஆக்ஷன் ஹீரோவாக்கியது இந்த படம்தான் என்பதும், அது மட்டுமின்றி ரசிகர்கள் அஜித்தை 'தல' என்று அன்போடு

கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள்..! சாதனா, ஜிபி. முத்து மீது காவல் நிலையத்தில் புகார்...!

இணையத்தில் பிரபலமாக இருப்பவர்களான டிக்டாக் சாதனா, ஜிபி முத்து, சூர்யா, சிக்கா மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உதயநிதியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடி வழக்கு!

உதயநிதி ஸ்டாலினின் வெற்றிக்கு எதிராக அதே தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார்.