எனக்காக ரோட்டில் படுத்து தூங்குவதெல்லாம் கொஞ்சம் ஓவர்: ரசிகரை கண்டித்த பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
என்னை பார்ப்பதற்காக ரோட்டில் படுத்து தூங்கு போதெல்லாம் கொஞ்சம் ஓவராக தெரிகிறது என பிரபல தமிழ் நடிகை ஒருவர் கூறியிருப்பது கூறியுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’முகமூடி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் பூஜாவின் தீவிரமான ரசிகர் ஒருவர் ஆந்திராவில் இருந்து அவரைக் காணும் ஆவலில் மும்பைக்குச் சென்று உள்ளார். பூஜாவை பலவிதங்களில் அவர் பார்க்க முயற்சித்தும் அவரை அணுக முடியவில்லை.
இருப்பினும் அவர் மனம் தளராமல் பூஜாவை பார்த்துவிட்டுதான் ஊர் திரும்புவேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். தங்குவதற்கு இடம் இல்லாததால் அவர் சாலையோரத்தில் படுத்து தூங்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில் இது குறித்து பத்திரிகை செய்திகள் மூலம் அறிந்த பூஜா, உடனடியாக அந்த ரசிகரை நேரில் சென்று பார்த்தார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் ’என்னை பார்ப்பதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கும் அந்த ரசிகருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனுப்பிய அனைத்து மெசேஜ்களையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். அவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி.
ஆனால் அதற்காக என்னைப் பார்த்துதான் ஆகவேண்டும் என்று ரோட்டில் படுத்து தூங்குவது எல்லாம் கொஞ்சம் ஓவராக உள்ளது. தயவு செய்து இந்த ரசிகர் மட்டுமல்ல வேறு யாரும் இவ்வாறு செய்யக்கூடாது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments